Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உலக திறன் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பாராட்டு

உலக திறன் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பாராட்டு
உலகத்திறன் போட்டியில் வென்ற ஜா.முகமது சலாமிற்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்.

தமிழ்நாட்டிலிருந்து ஜா. முகமது சலாம், கா.பா. ராகுல், சு.வி. அர்ஜுன், ம.சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோர் பதக்கம் வென்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களை முதல்வர் ச.ஜோசப் விஜய் நேரில் அழைத்து பாராட்டி ரூ.49 இலட்சத்திற்கான ஊக்கத்தொகை வழங்கினார்.

ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 பேரையும் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பாராட்டுத் தெரிவித்தார். 

68 நாடுகள் பங்கேற்ற 48-வது உலகத் திறன் போட்டிகளில், இந்தியா மொத்தம் 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்று 10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் களம் கண்ட 70 நபர்கள் கொண்ட இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து ஜா. முகமது சலாம், கா.பா. ராகுல், சு.வி. அர்ஜுன், ம.சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோர் பதக்கம் வென்றனர். 

இச்சாதனைகள், திறன் மேம்பாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் ஆற்றலை, சர்வதேசத் தரத்திற்கு இணையாக உயர்த்த அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பறைசாற்றுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் சோ.மதுமதி, திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



முந்தைய செய்தி
Microsoft offers buyouts to 60,000 employees across
அடுத்த செய்தி
இந்தியா முக்கிய ஏற்றுமதியாளராக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

தொடர்புடைய செய்திகள்